ஹாஸ்பிடலில் 3 மணிநேர மின்தடை... நேரில் வந்த முதன்மைச் செயலாளர் - பரபரத்த கீழ்பாக்கம்

x

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகள் அவதி அடைந்தனர். மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டுமானப் பணிகளுக்காக ஜே.சி.பி மூலம் பள்ளம் தோண்டும்போது எதிர்பாராத விதமாக மின்சாரக் கேபிள்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் நேற்று மாலை 6 மணி அளவில் மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்ட நிலையில், நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகினர். செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வேறு கட்டடத்திற்கு நோயாளிகள் மாற்றப்பட்டனர். இரவு 9 மணி அளவில் மருத்துவமனைக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்