அறுந்து விழுந்த மின்கம்பி-மின்சாரம் பாய்ந்து 3 நாய்கள் பரிதாப பலி

அறுந்து விழுந்த மின்கம்பி-மின்சாரம் பாய்ந்து 3 நாய்கள் பரிதாப பலி
Published on

மழைக்கு அறுந்து விழுந்த மின்கம்பிகளால் மின்சாரம் பாய்ந்து நாய்கள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது. கோண்டூர், பாப்பம்மாள் நகர் பகுதியில் மின் கம்பி அறுந்து தெருவில் விழுந்துள்ளது. இதனை அங்குள்ள நபர் பார்த்து மாவட்ட நிர்வாகத்திற்கும் மின்சார துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அங்கேயே சாலையில் அமர்ந்து அப்பகுதியில் யாரும் வராத வண்ணம் அவர் தடுத்துள்ளார். இதனிடையே அங்கு சென்ற 3 நாய்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியாகின... தாமதமாக வந்த மின்சார ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தி மின்கம்பியை சரி செய்துள்ளனர். முன்கூட்டியே அவர்கள் வந்திருந்தால் 3 உயிர்கள் பலியாகி இருக்காது என்பதே அனைவரின் விரக்தியாக உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com