Tirupatur News | பாட்டி மீது இடித்து பயங்கரம் - 18 வயசு பசங்க இருவர் துடிதுடிக்க கோர மரணம்
மூதாட்டி மீது பைக் மோதிய கோர விபத்தில் 3 பேர் பலி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வளையாம்பட்டு அருகே, தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது, பைக் மோதிய கோர விபத்தில், மூதாட்டி உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 75 வயது மூதாட்டி சரசம்மாள் சாலையைக் கடந்தபோது, ஆம்பூரைச் சேர்ந்த இளைஞர்கள் சாமியுல்லா மற்றும் பல்லா இருவரும் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து, மூதாட்டி மீது மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 வயது இளைஞர்கள் இருவரும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
