சடலமாக கிடந்த 3 யானைகள் - பிரேத பரிசோதனை செய்த மருத்துவக்குழு
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் மூன்று யானைகள் சடலங்களாக கிடந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இதனையடுத்து சென்னையை சேர்ந்த மருத்துவ குழுவினர் யானைகளின் உடலை பிரேத பரிசோதனை செய்து, மாதிரிகளையும் எடுத்து சென்றனர். முதற்கட்ட விசாரணையில் மூன்று யானைகளும் பத்து முதல் 15 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
Next Story
