Diwali | Goat Market| ரூ.3 கோடியாம்.. அடடா.. தமிழ்நாட்டுக்கே இப்ப தான்யா `தீபாவளி களை’ வருது

ரூ.3 கோடியாம்.. அடடா.. தமிழ்நாட்டுக்கே இப்ப தான்யா `தீபாவளி களை’ வருது

#diwali #goatmarket

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் இன்று அதிகாலை தொடங்கிய சிறப்பு ஆட்டுச்சந்தை களைகட்டியது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய சந்தையில், காலை 7 மணி வரை சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன. சந்தை மதியம் வரை நடைபெற உள்ளதால், விற்பனை மேலும் பல கோடி ரூபாயைத் தாண்டும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மட்டுமின்றி, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். கறிக்கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களும் அதிக அளவில் திரண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இந்த ஆண்டு ஆடுகளின் விலை சற்று அதிகமாக இருப்பதாக வியாபாரிகளும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

X