திருப்பத்தூர் : வங்கியில் ரூ. 6 கோடி மோசடி - முன்னாள் மேலாளர்கள் உள்பட 3 பேர் கைது

திருப்பத்துாரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியதில் ஆறு கோடி ரூபாய் மோசடி செய்ததாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்னாள் மேலாளர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் : வங்கியில் ரூ. 6 கோடி மோசடி - முன்னாள் மேலாளர்கள் உள்பட 3 பேர் கைது
Published on
சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் உள்ள அந்த வங்கியில், கடந்த 2010 முதல் 2012 ஆண்டு வரை முதன்மை மேலாளர்களாக பிரேம் குமார், நேரு ஆகியோர் பணிபுரிந்து உள்ளனர். அவர்கள் திருப்பத்தூரில் செயல்பட்ட அன்னம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் தமிழ்செல்வி என்பவருடன் சேர்ந்து 288 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 6 கோடியே 14 லட்சத்து 46ஆயிரம் கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடன்கள் திரும்ப வசூல் ஆகாத நிலையில், வங்கி அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு விதிமுறைகளை மீறி கடன் வழங்கியதும், போலி ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றியதும் தெரியவந்தது. இது தொடர்பாக வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பிரேம்குமார், நேரு மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com