பிரபல நிறுவனம் பெயரில் தரம் குறைந்த பேரிச்சம் பழம் விற்பனை : 3 பேர் சிறையில் அடைப்பு

திருச்சி திருவெறும்பூரில் பிரபல நிறுவனத்தின் பெயரில் பேரீச்சம் பழ பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
பிரபல நிறுவனம் பெயரில் தரம் குறைந்த பேரிச்சம் பழம் விற்பனை : 3 பேர் சிறையில் அடைப்பு
Published on

திருச்சி திருவெறும்பூரில் பிரபல நிறுவனத்தின் பெயரில் பேரீச்சம் பழ பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். திருச்சி பழ கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். துவாக்குடியில் உள்ள நேசம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம். மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் பெயரில் போலியாக தரம் குறைந்த பேரிச்சம் பழங்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து வேன் டிரைவர் இர்பான், அப்பு டிரேடர்ஸ் உரிமையாளர் முத்துக்குமார், அக்சயா பேக்கரி உரிமையாளர் கருப்பையா ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com