நாளை இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் - வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தயார்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் இடங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.
நாளை இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் - வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தயார்
Published on

தமிழகத்தில், 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல், 27ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில், 76 புள்ளி 19 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

இந்நிலையில், 255 மாவட்ட கவுன்சிலர்; 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்; 4 ஆயிரத்து 924 ஊராட்சி தலைவர்கள்; 38 ஆயிரத்து, 916 கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் பதவிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல், நாளை நடக்க உள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தலில், ஒரு கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக, 25 ஆயிரத்து, 8 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் நேற்று மாலை, 5 மணியுடன், தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. தேர்தல் பிரசாரத்திற்காக, வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் உடனடியாக வெளியேறுமாறு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com