திருச்சி விமான நிலையத்தில் ரூ.66.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்...

ரூ.66.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.66.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்...
Published on
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் வழக்கம் போல் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மலேசியா மற்றும் சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை, சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நடந்து கொண்ட சென்னையை சேர்ந்த சதாம் உசேன், முஸ்தாக் அலி, திருச்சியை சேர்ந்த அசாருதீன், ஹிக்கமதுல்லா ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர்கள் தங்களது செருப்புகள் மற்றும் ஆசனவாயில், பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, ஒரு கிலோ 940 கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com