lake | Boys Death | ஏரியில் விளையாட சென்ற சிறுவர்கள் - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சென்னை பல்லாவரம் அருகே ஏரியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருசூலம் அருகே உள்ள ராணி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் ஹன்சிக் சாய் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தனது சக நண்பனான, மகதீஷ் என்பவருடன் அப்பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், விளையாடிக் கொண்டிருந்த ஹன்சிக் சாய் திடீரென நீரில் மூழ்க, அவரை காப்பாற்ற சென்ற மகதீசும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
