அனைத்து சட்ட முறைகளின்படியே மேல்முறையீடு மனு தாக்கல் - 2ஜி வழக்கில் சிபிஐ வாதம்

அனைத்து சட்ட முறைகளை கடைப்பிடித்தே மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என 2ஜி வழக்கில் சிபிஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் வாதிட்டார்.
அனைத்து சட்ட முறைகளின்படியே மேல்முறையீடு மனு தாக்கல் - 2ஜி வழக்கில் சிபிஐ வாதம்
Published on

2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான 6-ஆவது நாள் தொடர் விசாரணை, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி அமர்வு முன் நடைபெற்றது. சிபிஐ, அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் ஆஜராகி, அனைத்து சட்ட முறைகளை கடைப்பிடித்து சிபிஐ மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது என வாதிட்டார். எதிர்மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் ஹரிகரன் ஆஜராகி, உயர்நீதிமன்றத்தின் ஆலோசனை படியே, மேல்முறையீடு மனு தாக்கல் செய்யும் அரசு வழக்குரைஞர் நியமிக்கப்பட வேண்டும் என வாதிட்டார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com