மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-07-2025) | | Thanthi TV |
தைலாபுரம் தோட்டத்தில் port forwarding method மூலம் பாமக நிறுவனர் ராமதாசின் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்...
சைபர் கிரைம் காவல்துறை உயர் அதிகாரிகளின் அறிவுரைப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு...
பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ். வெளியே வந்துவிட்டால் நிம்மதி என கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன் பரபரப்பு பேட்டி...
விஜய்-ஓபிஎஸ் சேர்ந்தால் அரசியலை நடத்த முடியும் எனவும் கருத்து கூறியுள்ள நிலையில், முழு பேட்டி இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு...
சென்னை, நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்...
முதல்வர் ஸ்டாலின் மற்றும் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஒரே நபரா? என போலீசார் விசாரணை...
மதிமுகவில், உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்த மல்லை சத்யா.....
உண்ணாவிரதம் உடல் நலத்திற்கு நல்லது., இருக்கச் சொல்லுங்கள் என துரை வைகோ விமர்சனம்....
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மானசா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு...
மூச்சுத்திணறல் ஏற்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...
ஹரித்வார் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு...
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவிப்பு...
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நேரில் ஆறுதல்...
நெல்லை, திருப்பூர், தேனி, தென்காசி, கோவை ஆகிய ஐந்து மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு...
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சோகம்...
மண்ணுக்குள் புதைந்த மேலும் ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...
கேரள மாநிலம் இடுக்கி அருகே, வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் தரைப்பாலத்தை அலட்சியமாக கடந்து செல்ல முயன்ற இளைஞரால் அதிர்ச்சி...
இளைஞர் தப்பிய நிலையில், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஸ்கூட்டர்...
கேரள மாநிலம் அதிரப்பள்ளி அருகே உள்ள சாலக்குடி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு...
வெள்ளத்தில் இறங்கி மறு கரைக்கு நீந்திச் சென்ற காட்டு யானை...
