எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 25 லட்சம் பறிமுதல்

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 25 லட்சம் பறிமுதல்
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 25 லட்சம் பறிமுதல்
Published on

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 25 லட்சம் பறிமுதல்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 25 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும்,இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.இந்த சோதனையில் ரொக்கப் பணமாக 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயும்,முக்கிய சொத்து ஆவணங்கள் மற்றும் முதலீடுகள், பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை கூறியுள்ளது.இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com