231 ஆட்டு கிடா விருந்து, ஆடி மாத திருவிழா அமோகம். ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வினோதம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளும் வினோத கிடாவிருந்து திருவிழா நடைபெற்றது. மலையாம்பட்டி கிராமத்தில் உள்ள மலையாளதெய்வம் கோவிலில் ஆடிமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் .இவ்விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டு மலையாளதெய்வத்தை தரிசிப்பது வழக்கம்.இந்நிலையில் 231 ஆட்டுகிடாக்கைளை பலியிட்டு சமபந்தி கிடாவிருந்து நடைபெற்றது , இந்நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com