2026 எலக்சன் - விறுவிறுப்பாக அடியெடுத்து வைக்கும் பாஜக
தமிழகம் முழுவதும் ஏழு கட்டங்களாக பாஜக சார்பில் மாநாடு நடத்த திட்டம் - தேதி மற்றும் இடம் அறிவிப்பு
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வலிமைப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தொகுதி வாரியாக மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான இடம் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக முழுவதும் ஏழு கட்டமாக மாநாடுகள் நடத்தப்படுகிறது. திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மாநாடுகள் நடத்தப்பட உள்ளது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் மாநாட்டில் திருநெல்வேலி கன்னியாகுமரி விருதுநகர் தூத்துக்குடி தென்காசி ஆகிய பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்
செப்டம்பர் 13 இல் மதுரையில் நடைபெறும் மாநாட்டில் மதுரை தேனி சிவகங்கை திண்டுக்கல் ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்
அக்டோபர் 26 இல் கோயம்புத்தூரில் நடைபெறும் மாநாட்டில் கோவை பொள்ளாச்சி திருப்பூர் நீலகிரி ஈரோடு பகுதிகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்
நவம்பர் 23இல் சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் கிருஷ்ணகிரி தர்மபுரி கள்ளக்குறிச்சி சேலம் நாமக்கல் கரூர் பகுதிகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்
டிசம்பர் 21 தஞ்சாவூரில் நடைபெறும் மாநாட்டில் பெரம்பலூர் தஞ்சாவூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் சிதம்பரம் தொகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்
ஜனவரி 4 2026 இல் நடைபெறும் மாநாட்டில் வேலூர் திருவண்ணாமலை அரக்கோணம் விழுப்புரம் ஆரணி கடலூர் தொகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஜனவரி 24 2026 ல் நடைபெறும் திருவள்ளூரில் மாநாட்டில் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் மத்திய சென்னை வடசென்னை தென் சென்னை ஆகிய பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.