"2021 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

2021 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
"2021 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
Published on

2021 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி தென் சென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அரும்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. அதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com