கொள்முதல் நிலையத்தில் 2,000 நெல் மூட்டைகள் சேதம் - விவசாயிகள் வேதனை

x

விழுப்புரத்தில் திடீரென பெய்த மழையால், கானை கிராமத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்தன.

கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யப்படாததால், நெல் மூட்டைகள் தார் பாய் போட்டு மூடியும், களத்தில் குவித்தும் வைத்திருந்தனர்.

இந்நிலையில், திடீரென பெய்த மழையால் தார் பாய் சரிந்து, 2 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகின. இதே போன்று, களத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லும் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.

இந்நிலையில், நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.==


Next Story

மேலும் செய்திகள்