பந்திப்பூர் வனப்பகுதியில் 20 குரங்குகள் சடலமாக கண்டெடுப்பு

x

பந்திப்பூர் வனப்பகுதியில் 20 குரங்குகள் சடலமாக கண்டெடுப்பு

கர்நாடகாவில் பந்திப்பூரில் வனப்பகுதிக்கு செல்லும் சாலையில் சுமார் 20 குரங்குகள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் 20 குரங்குகள் இறந்த நிலையிலும், 2 குரங்குகள் மயக்க நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மயக்க நிலையில் இருந்த குரங்குகளை கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், மற்ற குரங்குகள் இறந்ததற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை கண்டறிய ஒரு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்