உடல் எடையை குறைக்க வெறும் தண்ணீர் மட்டுமே குடித்த +2 மாணவன் பலி
கன்னியாகுமரி அருகே உடல் எடையை குறைப்பதற்காக ஆன்லைன் டயட் முறையை பின்பற்றிய பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளச்சல் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் சக்தீஷ்வர், உடல் எடை அதிகரிக்கக் கூடாது என்பதற்காக இணையதளம் பரிந்துரைத்த டயர் சார்ட்டை பின்பற்றி வழக்கத்திற்கு மாறாக உணவை குறைவாக எடுத்ததோடு மட்டுமல்லாமல், வெறும் தண்ணீரை மட்டும் பருகி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் உடல்நலம் குன்றிய சக்தீஷ்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முறையான பரிந்துரை மற்றும் ஆலோசனையின்றி டயட் முறையை பின்பற்றுவது உயிருக்கு ஆபத்தாக அமையும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Next Story
