திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள அரசு மாதிரி பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர், தகவலறிந்து வந்து உடலை மீட்ட போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கடந்த 8 ஆம் தேதி தான் கட்டிடம் திறக்கப்பட்ட நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.