Tiger | Elephant | மனித வேட்டையாடும் புலியை பிடிக்க இறங்கிய 2 கும்கி யானைகள்

மனித வேட்டையாடும் புலியை பிடிக்க இறங்கிய 2 கும்கி யானைகள்

மனித வேட்டையாடும் புலியை பிடிக்க இறங்கிய 2 கும்கி யானைகள் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலியை பிடிக்கும் பணிக்கு சீனிவாசன், கிரி என இரண்டு புதிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன... ஓவேலி லாரிஸ்டன் கிராமத்தில் இரண்டு பேரை தாக்கிக் கொன்ற புலியை வனத்துறையினர் 25 வது நாளாக தேடிப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புலியைத் தேடிப் பிடிக்கும் பணிக்கு கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முதுமலை யானைகள் முகாமில் இருந்து பொம்மன், உதயன் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. 20 நாட்களுக்கும் மேலாக இந்த இரண்டு கும்கி யானைகளும் புலியை தேடிப் பிடிக்கும் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டன. இந்த நிலையில் இரண்டு கும்கி யானைகளும் ஓய்வுக்காக முதுமலை அழைத்துச் செல்லப்பட்டன. புலியை தேடும் பணிக்காக முதுமலை யானைகள் முகாமிலிருந்து சீனிவாசன், கிரி என்ற இரண்டு புதிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன...

X

Thanthi TV
www.thanthitv.com