2 நாட்கள் உஷார் - ரெட் அலர்ட் அறிவிப்பு... டூர் செல்வோர் கவனத்திற்கு

2 நாட்கள் உஷார் - ரெட் அலர்ட் அறிவிப்பு... டூர் செல்வோர் கவனத்திற்கு

நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்கள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தொட்டபெட்டா மலை சிகரம், கூடலூர் சாலையில் உள்ள பைன் மரக்காடுகள், படப்பிடிப்பு தளம் மற்றும் அவலாஞ்சி சுற்றுச்சூழல் மையம் ஆகியவை ஒரு நாள் மூடப்படுவதாக நீலகிரி மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் மரத்திற்கு அடியில் வாகனங்களை நிறுத்துவது அல்லது நிற்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com