ரூ.100-க்கு 2 பிரியாணி.. அலைமோதிய கூட்டம் - போலீஸ் வந்ததும் மறைந்த பிரியாணி கடை

x

ரூ.100-க்கு 2 சிக்கன் பிரியாணி ஆபர்.. அலைமோதிய மக்கள் கூட்டம்

நாமக்கல்லில், 100 ரூபாய்க்கு 2 சிக்கன் பிரியாணி பார்சல் என்ற ஆஃபருடன் நடமாடும் வாகனத்தில் பிரியாணி கடை புதிதாக திறக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட பொதுமக்களும், பிரியாணி பிரியர்களும் என அந்த வாகனத்தை சூழந்துக் கொண்டு பிரியாணிக்காக முண்டியடித்துக் கொண்டனர். இதனால், திருச்சி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்பு, அங்கு வந்த நாமக்கல் போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தினர். பின்பு, உரிய அனுமதி வாங்க வில்லை எனக் கூறிய போலீசார், நடமாடும் பிரியாணி வாகனத்தையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால், பிரியாணி வாங்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்