வேலை வாங்கி தருவதாக மோசடி : இருவர் கைது...

மதுரையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலை வாங்கி தருவதாக மோசடி : இருவர் கைது...
Published on

மதுரையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த பிரேமா என்ற மாற்றுத்திறனாளியிடம் புதூரைச் சேர்ந்த நடராஜன், முத்துசாமி ஆகிய இருவரும் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதற்காக நான்கு லட்சம் ரூபாய் பெற்ற அவர்கள் வேலை வாங்கித் தராமல் பலமாதமாக ஏமாற்றி உள்ளனர். பிரேமா அளித்த புகாரை தொடர்ந்து இருவரையும் புதூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரிடம் வேலை வாங்கி தருவதாக 25 லட்சம் ரூபாய் பெற்ற கன்னியாகுமரியை சேர்ந்த

பாலமுருகன், சிவராமகிருஷ்ணன், மாணிக்கவாசகம் ஆகிய 3 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com