தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக இதுவரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கரூர் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த மேலும் இருவரை சி.பி.சி.ஐ.டி போலீஸ் கைது செய்துள்ளது. 2017ல் நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.