ஆயுதங்களுடன் ஆட்டோவில் பதுங்கிய மூவர் - இருவர் கைது, ஒருவர் தப்பி ஓட்டம்

சென்னை திருவொற்றியூரில் ஆயுதங்களுடன் ஆட்டோவில் பதுங்கியிருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஆயுதங்களுடன் ஆட்டோவில் பதுங்கிய மூவர் - இருவர் கைது, ஒருவர் தப்பி ஓட்டம்
Published on
திருவொற்றியூர் குப்பம் அருகே ரோந்து பணியில் காவலர் அமுதபாண்டியன் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஆட்டோவை ஆய்வு செய்த போது மூன்று பேர், ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவலர் தப்ப முயன்ற இருவரை மடக்கி பிடித்த போதிலும் ,ஒருவர் தப்பி சென்றார். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் சங்கர், கார்த்தி என்பதும் தப்பி சென்றவர் சுரேஷ் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் எதற்காக ஆயுதங்களுடன் ஆட்டோவில் பதுங்கி இருந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com