ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த மாணவியிடம் சில்மிஷம், காவலர் உட்பட இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பள்ளி மாணவியை மிரட்டி சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலர் மற்றும் அவரது நண்பர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த மாணவியிடம் சில்மிஷம், காவலர் உட்பட இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
Published on
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பில், ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பள்ளி மாணவியை மிரட்டி சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலர் மற்றும் அவரது நண்பர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பள்ளி மாணவி தமது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததை புகைப்படம் எடுத்துவிட்டு, ஆண் நண்பரை அடித்து அங்கிருந்து விரட்டியுள்ளனர். பின்னர் அந்த புகைப்படத்தை வெளியிட்டுவிடுவேன் என்று கூறி மாணவியிடம் பணம் கேட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com