போக்சோ விசாரணைக்கு அழைத்ததால் 19 வயது மாணவி தற்கொலை முயற்சி
சென்னை ராமபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுவனின் தாயார் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், கல்லூரி மாணவி மற்றும் அவரது தாய் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பிரச்சினை பெரிதாக வெடிக்க, மன உளைச்சலில் இருந்த சிறுவன், கடந்த மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மாணவியின் குடும்பம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சிறுவனின் தாய் கோயம்பேடு காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் லைவ் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்த, துணை ஆணையர் அதிவீர பாண்டியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த சூழலில், வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கல்லூரி மாணவியின் வீட்டிற்கு சென்று போலீசார் சம்மன் அளித்தனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த கல்லூரி மாணவி, எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து கோடம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
