மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு - வாலாஜாபாத் போலீசார் விசாரணை

மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு - வாலாஜாபாத் போலீசார் விசாரணை
மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு - வாலாஜாபாத் போலீசார் விசாரணை
Published on

மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு - வாலாஜாபாத் போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே மின்னல் தாக்கியதில், 15 வயது சிறுவன் உயிரிழந்தார். கோயம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் கமலேஷ், அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, வயல் வெளியில் மேய்ச்சலில் இருந்த ஆடுகளை அழைத்து வர சென்ற போது, எதிர்பாராத விதமாக கமலேஷ் மீது மின்னல் தாக்கியது. இதில், உடல் கருகி சம்பவ இடத்திலேயே கமலேஷ் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வாலாஜாபாத் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com