15ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : கண்ணீர் மல்க பொதுமக்கள் அஞ்சலி

சுனாமி கோரத்தாண்டவத்தின் 15ஆம் ஆண்டு தினமான இன்று உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

சுனாமி ஆழிப்பேரலை தாக்கி நாகை மாவட்டத்தில் ஏறக்குறைய ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இன்று 15வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கீச்சாங்குப்பம் கிராமமக்கள், உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. சுனாமிக்கு பின் பிறந்த குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் உருவப்படத்தை கண்டு கதறி அழுத காட்சி காண்போரை வேதனை அடைய செய்தது.

X

Thanthi TV
www.thanthitv.com