பண்ணையில் உலாவிய 15 அடி ராஜநாகம் - வைரல் வீடியோ
த ென்காசி மாவட்டம் கடையம் அருகே, தனியார் விவசாய பண்ணையில் சுமார் 15 அடி நீளமுள்ள ராட்சத ஆண் ராஜநாகத்தை வனத்துறையினர் லாவகமாகப் பிடித்தனர். கோவிந்தபேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ராஜநாகம் ஊர்ந்து செல்வதைப் பார்த்த பணியாளர்கள், கடையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வந்த வனத்துறையினர், புதரில் பதுங்கி இருந்த 15 அடி நீளமுள்ள ஆண் ராஜநாகத்தை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த நாகம், அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
