Protest | 150 விவசாயிகள் குண்டுகட்டாகக் கைது - ஸ்பாட்டில் இறங்கிய 600 போலீஸ்
Protest | 150 விவசாயிகள் குண்டுகட்டாகக் கைது - ஸ்பாட்டில் இறங்கிய 600 போலீஸ்
#protest #trichy #farmers #thanthitv
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் குண்டுகட்டாகக் கைது செய்தனர். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த விவசாய சங்கத்தினர் திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து, சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருங்களூர் அருகே எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் பகுதியில் திரண்ட விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்ததால் பரபரப்பு நிலவியது.
