மின்கம்பத்தில் மோதி விபத்து – 15 வயது மாணவர் பலி
மின்கம்பத்தில் மோதி விபத்து – 15 வயது மாணவர் பலி
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஒரே பைக்கில் சென்ற 4 மாணவர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், 15 வயது மாணவர் உயிரிழந்தார், 3 பேர் படுகாயமடைந்தனர்.
எச்சூரைச் சேர்ந்த சஞ்சய், ஜோஸ்வா, ஜஸ்வந்த், சந்துரு ஆகியோர் பைக்கில் ஒன்றாக சென்றபோது, வளைவில் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி உள்ளது. இதில் ஜோஸ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோதிய வேகத்தில் மின்கம்பம் இரண்டாக உடைந்தது. காயமடைந்த 3 மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#kanchipuram #police #accident #death #thanthitv
