ஓடும் பேருந்தில் திடீரென காணாமல் போன 15 சவரன் நகை-சோதனை செய்ததில் காத்திருந்த அதிர்ச்சி
ஓடும் பேருந்தில் திடீரென காணாமல் போன 15 சவரன் நகை-சோதனை செய்ததில் காத்திருந்த அதிர்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே ஓடும் பேருந்தில் 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பெண் ஒருவர் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரத்தை சேர்ந்த திகழினி என்பவர், சென்னை செல்வதற்காக, தனது தாயுடன் அரசுப் பேருந்தில் சென்றுள்ளார். சுங்குவார்சத்திரம் வந்தபோது, டிக்கெட் எடுப்பதற்காக, பையை பார்த்தபோது, அதில் இருந்த 15 சவரன் நகை இல்லாததை கண்டு கூச்சலிட்டுள்ளார். உடனே பேருந்தை காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பயணிகள் அனைவரையும் போலீசார் சோதனை செய்தபோது, யாரிடமும் நகை இல்லாததால், பேருந்து நிலையத்திலேயே திருடப்பட்டிருக்கலாம் என திகழினி தெரிவித்துள்ளார். இதையடுத்து, காஞ்சிபுரம் போலீசில் புகார் அளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
