15 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு - பெண்கள் கண்ணீருடன் புகார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நல்லிருக்கை கிராமத்தில், 15 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கண்ணீருடன் புகார் அளித்தனர். கிராம பொது நிதி செலவு தொடர்பாக கணக்கு கேட்டதால், ஒதுக்கி வைத்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் திருமண விழாக்கள், இறப்பு போன்றவற்றில் பங்கேற்க முடியவில்லை எனவும், பள்ளிக்கூடத்தில் தங்கள் குழந்தைகளோடு மற்ற குழந்தைகள் பேசுவதில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் கூறினர். மேலும் தங்களுக்கு உரிய நீதி வாங்கி தருமாறு கோரிக்கையும் வைத்துள்ளனர்.
Next Story
