PR Pandian Pressmeet | ``15 நாள் தான் டைம்'' - PR பாண்டியன் பகீர் எச்சரிக்கை

x

பி.ஆர். பாண்டியன் அரசுக்கு எச்சரிக்கை

நெல் கொள்முதலுக்கான பணத்தை 75 நாட்களுக்கும் மேலாக வழங்காததை கண்டித்து, சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கத்தினர் முயன்றனர். அப்போது, விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன், வேளாண் துறை அதிகாரிகள் சென்னை எழிலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை அடுத்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், நெல் கொள்முதலுக்கான பணத்தை 15 நாட்களில் தராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்