தேனி அருகே சாலையை கடக்க முயன்ற 15 மாடுகள் பலி
சாலையைக் கடந்த கிடை மாடுகள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 15 மாடுகள் சம்பவ இடத்தில் பலி.
பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே T. கள்ளிப்பட்டி பகுதியில் திண்டுக்கல் மாவட்டம் மஞ்ச நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் 80 க்கும் மேற்பட்ட கிடை மாடுகளை அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கிடை அமர்த்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் மாடுகளை வேறு ஒரு விளை நிலத்திற்கு கிடை அமர்த்த இடம் மாற்றம் செய்வதற்காக ஓட்டிச் சென்றபோது தேனி - திண்டுக்கல் புறவழிச்சாலையில் சாலையை கடந்த போது தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் 15 மாடுகள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் பலியானது.
பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட மாடுகள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்து மோதி பலியாகி சாலையில் கிடந்த மாடுகளை சாலை ஓரத்தில் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும் அரசு பேருந்து மோதி நாட்டு மாடு பலியான சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதோடு அரசு பேருந்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
