தஞ்சையில் வீட்டின் சுவரில் 14 கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள் மீட்பு

தஞ்சையில் வீட்டின் சுவரில் 14 கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள் மீட்பு
Published on

தஞ்சை, மாதா கோட்டை சாலை அருகே உள்ள வீட்டின் சுற்றுப்புற சுவரில் பாம்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் தனியார் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தனியார் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆய்வு மேற்கொண்ட நிலையில், சிமெண்ட் தரையின் அடிப்பகுதியில் காணப்பட்ட விரிசலை பாதுகாப்பாக உடைத்தபோது, கண்ணாடி விரியன் இனத்தை சேர்ந்த பாம்பு, 14 குட்டிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டன. மீட்கப்பட்ட பாம்பு குட்டிகள் சில நாட்களுக்கு முன்பு பிறந்தவை என கண்டறியப்பட்டதுடன், பாம்புகள் வனத்துறை மூலமாக பாதுகாப்பான வனப்பகுதியில் விடப்பட உள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com