கொரோனாவுக்கு நேற்று 1,358 பேர் இறப்பு - 16-வது நாளாக 5%க்கும் கீழ் தினசரி பாதிப்பு
இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 16-வது நாளாக 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்து 2 புள்ளி ஆறு ஏழு சதவீதமாக உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்றைய தினம், 50 ஆயிரத்து 848 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 28 ஆயிரத்து 709ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 358 பேர் இறந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு மூன்று லட்சத்து 90 ஆயிரத்து 660ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 68ஆயிரத்து 817 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
82 நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்திற்கும் கீழ் குறைந்து 6 லட்சத்து 43 ஆயிரத்து 194ஆக இருக்கிறது.
இதுவரை 29 கோடியே 46 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
