``இத்தன வருஷம் School Life,இனிமேல் இருக்காது..’’ - பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி பேட்டி
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக மாணவர்கள் ஏக்கத்துடன் தெரிவித்தனர். கடைசி தேர்வை எழுதி முடித்த பிறகு மகிழ்ச்சியில் இருந்தாலும், நண்பர்களை பிரிவது வேதனை அளிப்பதாக மாணவர்கள் கூறினர். கடைசி தேர்வு நாளில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க காவலர்கள் வந்திருந்தாலும், சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தேர்வு முடிந்ததும் மாணவர்கள் கழிவறைக்குள் பதுக்கி வைத்திருந்த பட்டாசு பண்டல்களை வெடிக்கச் செய்து, அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
Next Story
