12th Exam எழுதிவிட்டு மகிழ்ச்சியுடன் வந்த 12th Student-ஐ தேடிவந்த கொடூர மரணம்
நெமிலி அருகே 12ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த புன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம். இவருடைய இளைய மகன் சிதம்பரம், நெமிலி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தேர்வு எழுதிவிட்டு வந்த சிதம்பரம், நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது தண்ணீரில் குதித்தவர் வெகு நேரம் மேலே வரவில்லை. அதிர்ச்சியான நண்பர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு உயிரிழந்த சிதம்பரத்தின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
