12th Result Date | பிளஸ் 2 மாணவர்களே.. நீங்கள் எதிர்பார்த்த `ரிசல்ட்’ தேதி வெளியானது
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்குகின்றன. அதேபோல, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் இறுதி நாளான இன்று விருப்ப மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. கடந்த மார்ச் 11-ஆம் தேதி தொடங்கிய 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில், முக்கிய 5 பாடங்கள் முடிவடைந்த நிலையில், அரபிக், உருது, சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 5,027 மாணவர்கள் விருப்பமொழி தேர்வை எழுதுகின்றனர். இது விருப்பப் பாடம் என்பதால் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் 89 மையங்களில் இன்று முதல் தீவிரமாக நடைபெற உள்ளன. இப்பணிகள் நிறைவடைந்த பின், 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ஆம் தேதி வெளியாகும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
