12th Exam Result | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - வெளியான முக்கிய தகவல்
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 7ம் தேதி வெளியாகக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. விடைத்தாள்கள் மதிப்பீடு பணிகள் முடிந்து, தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. வரும் 9ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில், முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, எந்த தேதியில் முடிவு வெளியாகும் என்ற அறிவிப்பு 6ம் தேதி வெளியாகும் என்றும், ஏழாம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவினை, 7ம் தேதி காலை 10 மணிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் சென்னையில் தொடங்கி வைப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
