12th Exam 2026 | பிளஸ் 2 கெமிஸ்ட்ரி தேர்வில் அதிர்ச்சி

12th Exam 2026 | பிளஸ் 2 கெமிஸ்ட்ரி தேர்வில் அதிர்ச்சி

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் 10,159 மாணவர்கள் ஆப்சென்ட் வேதியல் தேர்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் ஆப்சென்ட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற வேதியியல் தேர்வில், ஐந்து மதிப்பெண் வினா பகுதி கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொழிப்பாட தேர்வுகள் முடிவடைந்து, முக்கிய பாடத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. இதில், வேதியியல் தேர்வில் ஐந்து மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக, சென்னையில் தேர்வு எழுதிய மாணவிகள் தெரிவித்தனர். இந்த தேர்வில் 10 ஆயிரத்து 159 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதாகவும், முறைகேட்டில் ஈடுபட்ட 9 மாணவர்கள் பிடிபட்டதாகவும் அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது .

X

Thanthi TV
www.thanthitv.com