``11 மாணவர்கள் வகுப்புக்கு வர தடை'' - கல்லூரி நிர்வாகம் உத்தரவு

x

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில்,11 மாணவர்களுக்கு வகுப்புக்கு வர இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரை, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படியில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக 11 மாணவர்கள் பெயரை சேர்த்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், முழு விசாரணையும் முடிந்த பின்னரே அந்த 11 பேரும் வகுப்புக்கு வர வேண்டுமென, கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்