Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24.06.2025) | 11 PM Headlines | ThanthiTV
- இந்தியாவில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் ரயில் கட்டணங்கள் உயரக்கூடும் என தகவல்...ஏசி ரயில்களில் கிலோமீட்டருக்கு 2 பைசா வரை அதிகரிக்க வாய்ப்பு...
- வேலூரில் முதல்வர் திறந்து வைக்க உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், ஈபிஎஸ் நேரில் வந்து ஆய்வு செய்ய தடை இல்லை...போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லை என ஈபிஎஸ் குற்றம்சாட்டி இருந்த நிலையில், அமைச்சர் மா.சுப்ரமணியன் பதிலடி...
- திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ராமன் சஸ்பென்ட்...புகார் கொடுக்க வந்த கர்ப்பிணி உள்ளிட்ட மூன்று பேரை தாக்கிய புகாரில், மாவட்ட எஸ்.பி. அதிரடி நடவடிக்கை...
- சென்னை ஆர்.கே.நகரில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடம் லஞ்சம் கேட்கும் பெண் அதிகாரி...ஊதியத்தில் 1,500 முதல் 5,000 ரூபாய் வரை தர வேண்டும் என கேட்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி...
- ரீல்ஸ் வீடியோவில் துப்பாக்கி, தோட்டாக்கள், பட்டாக் கத்தியை பதிவிட்ட திருவள்ளூரை சேர்ந்த கல்லூரி மாணவர்...தேவையற்ற பதற்றத்தை தணிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை...
- மயிலாடுதுறை மாவட்டம் நீடூரில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நபருக்கு, பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டு... பைக்கில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்...
- கன்னியாகுமரி மாவட்டம் பறக்கையில் கொலை முயற்சி வழக்கில் போலீசாரிடம் சிக்காமல் இருக்க குளத்தில் குதித்து தப்ப முயன்ற நபர்... தாமரைகளுக்கு இடையே பதுங்கி இருந்தவரை, படகில் சென்று பிடித்த போலீசார்...
- குமரி மாவட்டம் தக்கலை அருகே ரீல்ஸ் மோகத்தில் மினி லாரியை அந்தரத்தில் தொங்கவிட்டு வீடியோ பதிவிட்ட விவகாரம்... வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்த போலீசார்...
- இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி... 2வது இன்னிங்சில் பென் டக்கெட் 149 ரன்கள் விளாசிய நிலையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..
Next Story
