தென்னந்தோப்பில் புதைக்கப்பட்ட 11 மாத குழந்தை | தோண்டி எடுக்கப்பட்ட உடல்

x

11 மாத பெண் குழந்தை மர்ம மரணம் - உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

திருப்பத்தூரில் மர்மமான முறையில் உயிரிழந்த 11 மாத பெண் குழந்தையை, அதன் பெற்றோர் தென்னந்தோப்பில் புதைத்த நிலையில், வட்டாட்சியர் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கந்திலி அடுத்த மண்டலநாயன குண்டா பக்கிரிகான் மட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் - முத்துலட்சுமி தம்பதி. இவர்களது 11 மாத பெண் குழந்தை கவியாழினி மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு, குழந்தையின் உடலை பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் புதைத்துள்ளனர். இது தொடர்பாக, கந்திலி வட்டார மருத்துவரான உமாதேவி என்பவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்பு வட்டாட்சியர் முன்னிலையில், குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்த மருத்துவ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராஜ்குமாருக்கு ஏற்கனவே, 4 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இந்த பெண் குழந்தையை கொன்று புதைத்தார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்பன குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்