Chennai School boy Missing | பள்ளி சென்ற 10-ம் வகுப்பு மாணவன் மாயம்..தவிக்கும் பெற்றோர்

பள்ளி சென்ற 10-ம் வகுப்பு மாணவன் மாயம்..தவிக்கும் பெற்றோர்

#chenani #schoolboy #thanthitv

சென்னை பல்லாவரம் அருகே பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் 4 நாட்களாக மாயமாகியுள்ளதால், பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொழிச்சலூரைச் சேர்ந்த பாபு – சியாமளா தம்பதியின் மகன் நிதிஷ், கடந்த சனிக்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெறோர்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவனிடம் பணமோ, செல்போனோ இல்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com