புயல் பாதித்த மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்பு... அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா?

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு பொதுத் தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் பத்தாம் தேதி துவங்குகிறது.
புயல் பாதித்த மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்பு... அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா?
Published on

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு பொதுத் தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் பத்தாம் தேதி துவங்குகிறது. புயல் காரணமாக நாகை, தஞ்சாவூர், திருவாரூர் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக ஒருவாரத்திற்கு மேலாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால், அரையாண்டு தேர்வு பாடங்கள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான போட்டித் தேர்வு வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வை நாகை மாவட்டத்தில் அதிக அளவிலான மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த விவகாரமும் மாணவர்களுக்கு சிக்கலாக மாறி இருக்கிறது. இதனால் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா என மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com