102 கிமீ.. 68 நிமிடங்களில்.. 6 பேரை காப்பாற்ற மின்னலாய் வந்த ஆம்புலன்ஸ்

x

தென்காசி மாவட்டத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ஆறு நபர்களை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 68 நிமிடங்களில் மதுரைக்கு அழைத்து சென்றது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த இளைஞர்கள், குற்றாலத்திற்கு காரில் சுற்றுலா சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம் மரத்தில் கார் மோதி விபத்தில் சிக்கினர். ராஜபாளையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து 4 ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 102 கிலோமீட்டர் தூரத்தை 68 நிமிடங்களில் விரைவாக கடந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பத்திரமாக மதுரையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முன்னே சென்று வழி ஏற்படுத்தி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்